Newsகிளிநொச்சியில் பஸ் – கனரக வாகனம் மோதி விபத்து - 40க்கு...

கிளிநொச்சியில் பஸ் – கனரக வாகனம் மோதி விபத்து – 40க்கு மேற்பட்டோர் காயம்

-

கிளிநொச்சி – முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டதாகவும் 32 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலும் 05 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் பேருந்து, கனரக வாகனம் மற்றும் வான் என்பன சேதமடைந்துள்ளன.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...