மெல்போர்னின் தெற்கு யார்ரா பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.
இது குற்றக் கும்பல்களுக்கிடையிலான மோதலின் விளைவு என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.