Cinema'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

-

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...