ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண் Kerstin Gurtner உறைபனி குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய மலையேற்றத்தின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதுடன், -20 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை நீடித்துள்ளது.
Grossglockner சிகரத்திற்கு சுமார் 150 அடி உயரத்தில் முற்றிலுமாக சோர்வடைந்த Kerstin Gurtner, உடல் வெப்ப நிலையை இழந்து நிலை குலைந்தார்.
Kerstin Gurtner இந்த மலையேற்ற பயணத்தை தனது காதலரும், அனுபவமிக்க மலையேற்ற வழிகாட்டியுமான 39 வயது Thomas Plamberger-உடன் இணைந்து தொடங்கியுள்ளார்.
காதலி உடல் சோர்வடைந்து நிலைகுலைந்த போது சரியான உதவிகள் செய்யாமல் கைவிட்டதற்காக Thomas Plamberger-உடன் மீது தற்போது அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2026 ம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி இன்ஸ்ப்ரூக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.






