Newsஇன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

-

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.

ஓர் ஆண்டுக்கு முன் சிறைக் கலவரத்தின்போது இறந்த, போதைப்பொருள் கடத்தல் நபர் லியான்ட்ரோ நோரெரோவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள, கோய்புரா கடந்த மாதம் 28ஆம் திகதி கியூவெடோ நகருக்கு வந்துள்ளார்.

அவர் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று, மதிய உணவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத இரு நபர்கள் பதிவினைப் பார்த்து அங்கு வந்துள்ளனர்.

ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் நிற்க, மற்றொரு நபர் கோய்புராவை நோக்கி வந்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையின்போது, கோய்புராவுடனான தனது உறவை வெளிப்படுத்த வேண்டாம் என கொல்லப்பட்ட நோரெரோ கணக்காளரிடம் கெஞ்சினார் என்றும், தனது மனைவிக்கு கோய்புரா குறித்து தெரிந்தால் கலவரம் ஆகிவிடும் என்றும் கூறினார் என வாதிடப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...