Adelaideஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி...

ஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 


டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் – ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.


41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில்  கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.  49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.


20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர். 


மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


இதையடுத்து சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

Latest news

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடவுச்சீட்டு குறித்து சிறப்பு அறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டில் விசேட கவனம் செலுத்துமாறு வெளிவிவகார திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இத்தாலியில்...

தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் அனுப்பும் விக்டோரியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, இணையத்தில் மிகவும் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து...

மானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

Centerlink Rent Assistance, வேலை தேடுபவர் மற்றும் பிற அரசாங்க மானியங்களுக்கான கொடுப்பனவுகளின் தொடக்கத்துடன் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கூடுதல் பணத்திற்கான உரிமையைப் பெறுவார்கள். இந்த மாதம்...

ஆஸ்திரேலிய ஆசிரியர்களை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர் நிதி

குயின்ஸ்லாந்து மாநில அரசு, ஆசிரியர்களை தொழிலில் ஊக்குவிக்க 71 மில்லியன் டாலர் நிதியுதவிக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் உதவியாக வழங்கப்படும்...

WA சாலை பாதுகாப்பை மேம்படுத்த $32 மில்லியன்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த 32 மில்லியன் டாலர் முதலீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீட்டில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய தோற்றத்துடன் கூடிய...

டிமென்ஷியா நோயாளிகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம்

டிமென்ஷியா நோயாளிகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடுகள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு புதிய அறிக்கையின்படி, 2767 வயதானவர்களின் தரவு இந்த ஆய்வுக்கு...