Newsஇலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்...பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

-

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு விழாவில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் என கூறி தனது உரையை துவங்கினார். தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பற்றியும் புகழ்ந்து பேசினார். மகாகவி பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகளை குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை பெருமையுடன் கூறினார்.

“தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாததார தேக்க நிலையில் இருந்து மீண்டு வரவும் இந்தியா தொடர்ந்து உதவும். இலங்கைக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி விழாவில் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...