Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...