Adelaide பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான...

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான தகவல்

-

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...