அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது.
அந்த விருதை முதல்முறையாக இந்த ஆண்டு ஒரு தமிழர் ஒருவர் பெற்றுள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான ஆளுநர் பல்கலாச்சார விருதை நீலா சிவா என்ற தமிழ் பெண் பெற்றுள்ளார்.