Newsமக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

மக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

-

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு வந்த 44 சதம் என்ற வரி 22 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 48 ரூபாவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு வாகனங்களை கொண்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஆறு மாத காலத்திற்கு 700 அவுஸ்திரேலிய டெலர்கள் மீதமாகும்.

இது இலங்கை ரூபாயின் பெறுமதியில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாகும். உலகில் எரிபொருள் நெருக்கடி காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கத்தின் வரி வருவாயை குறைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தை எடுத்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் கிடைக்கும் வருமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

நிலவும் நிலைமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்தியை விட மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

Latest news

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மீது புதிய வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, இந்த முடிவு ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய தேர்தல்களில் குறையும் “கழுதை வாக்குகள்” – தேர்தல் ஆணையம் 

ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த முறையும் சில "கழுதை வாக்குகள்" வாக்குப் பெட்டிகளில்...

ஆஸ்திரேலிய தேர்தல்களில் குறையும் “கழுதை வாக்குகள்” – தேர்தல் ஆணையம் 

ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த முறையும் சில "கழுதை வாக்குகள்" வாக்குப் பெட்டிகளில்...

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...