இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிட்டினி நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத் திடலில் தொடர்ந்தும் 9வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இளைஞர், யுவதிகள் மேற்கொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.