Sportsஐபிஎல் 2022 - மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2022 – மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

-

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மாவும், ப்ரியம் கார்க்கும் தொடக்கம் தந்தனர். மும்பையின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 18 ரன்களிலேயே பிரிந்தது. அதிரடியாக ஆட முயன்ற அபிஷேக் ஷர்மா சாம்ஸ் வீசிய ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL

அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். பராக்குடன் ஜோடி சேர்ந்த இவர் அதிரடியாக ஆடினார். குறிப்பாக பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்தார். திரிபாதி அதிரடி காட்டியதை அடுத்து ப்ரியம் கார்க்கும் ஆறாவது ஓவரில் சிக்ஸ் அடிக்க பவர் ப்ளே முடிவதற்குள் ஹைதராபாத் அணி 50 ரன்களைக் கடந்தது.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 29 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை ரமன்தீப் சிங் பிரித்தார். அவர் வீசிய 10ஆவது ஓவரில் ப்ரியம் கார்க் 42 ரன்களில் வெளியேறினார்.

கார்க்குக்கு அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த திரிபாதி தொடர்ந்து அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை பதிவு செய்தார். பூரனும் தன் பங்குக்கு அதிரடியாக ஆட ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 15 ஓவர்களுக்கே 150ஐ கடந்தது.

IPL

இந்த ஜோடியை பிரிக்க மும்பை பவுலர்கள் காட்டிய முயற்சிக்கு நீண்ட நேரத்துக்கு பிறகு பலன் கிடைத்தது. 17ஆவது ஓவரில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பூரனுக்கு அடுத்ததாக, மார்க்ரம் களமிறங்கினார். அவர் வந்ததும் திரிபாதி 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்தவர்கள் சோபிக்க தவற 200 ரன்களை தாண்டும் என நினைத்த ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 193ல் நின்றது.

மேலும் படிக்க | இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் நிச்சயம் இடம் பெறமாட்டார்

இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி ஹைதராபாத் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஆரம்பித்தது. போகப்போக ஆட்டத்தில் வேகத்தை கூட்டிய ரோஹித் – கிஷன் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கி செல்ல, ரோஹித் ஷர்மா சிக்ஸ் அடிக்க முயன்று 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IPL

அவரைத் தொடர்ந்து சாம்ஸ் களமிறங்கினார்.இந்த ஜோடியும் அதிரடி காட்ட முயல கிஷன் 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கிஷனுக்கு அடுத்ததாக இளம் வீரர் திலக் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | RCB அளித்த கவுரவத்தால் உருகும் கெயில், டிவில்லியர்ஸ்

பின்னர் சாம்ஸும் டேவிட்டும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இணைய ஆரம்பித்ததும் உம்ரான் மாலிக் சாம்ஸை 15 ரன்களில் வெளியேற்றினார். இதனால் மும்பை அணி இக்கட்டான நிலைக்கு சென்றது. இதனையடுத்து டேவிட்டும் ஸ்டப்ஸும் ஜோடி சேர்ந்தனர். இக்கட்டான நிலையிலிருந்து அணியை இந்த ஜோடி மீட்கும் என நினைத்திருந்த சமயத்தில் ஸ்டப்ஸ் 2 ரன்களில் வெளியேறினார்.

ஸ்டப்ஸுக்கு பிறகு ரமன்தீப்புடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட், நடராஜன் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்து ரன் அவுட்டானார். இதன் பிறகு வந்தவர்களும் சொதப்ப மும்பை அணி இறுதியில் 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...