Sportsஐபிஎல் 2022 - மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2022 – மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

-

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மாவும், ப்ரியம் கார்க்கும் தொடக்கம் தந்தனர். மும்பையின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 18 ரன்களிலேயே பிரிந்தது. அதிரடியாக ஆட முயன்ற அபிஷேக் ஷர்மா சாம்ஸ் வீசிய ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL

அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். பராக்குடன் ஜோடி சேர்ந்த இவர் அதிரடியாக ஆடினார். குறிப்பாக பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்தார். திரிபாதி அதிரடி காட்டியதை அடுத்து ப்ரியம் கார்க்கும் ஆறாவது ஓவரில் சிக்ஸ் அடிக்க பவர் ப்ளே முடிவதற்குள் ஹைதராபாத் அணி 50 ரன்களைக் கடந்தது.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 29 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை ரமன்தீப் சிங் பிரித்தார். அவர் வீசிய 10ஆவது ஓவரில் ப்ரியம் கார்க் 42 ரன்களில் வெளியேறினார்.

கார்க்குக்கு அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த திரிபாதி தொடர்ந்து அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை பதிவு செய்தார். பூரனும் தன் பங்குக்கு அதிரடியாக ஆட ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 15 ஓவர்களுக்கே 150ஐ கடந்தது.

IPL

இந்த ஜோடியை பிரிக்க மும்பை பவுலர்கள் காட்டிய முயற்சிக்கு நீண்ட நேரத்துக்கு பிறகு பலன் கிடைத்தது. 17ஆவது ஓவரில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பூரனுக்கு அடுத்ததாக, மார்க்ரம் களமிறங்கினார். அவர் வந்ததும் திரிபாதி 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்தவர்கள் சோபிக்க தவற 200 ரன்களை தாண்டும் என நினைத்த ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 193ல் நின்றது.

மேலும் படிக்க | இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் நிச்சயம் இடம் பெறமாட்டார்

இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி ஹைதராபாத் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஆரம்பித்தது. போகப்போக ஆட்டத்தில் வேகத்தை கூட்டிய ரோஹித் – கிஷன் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கி செல்ல, ரோஹித் ஷர்மா சிக்ஸ் அடிக்க முயன்று 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IPL

அவரைத் தொடர்ந்து சாம்ஸ் களமிறங்கினார்.இந்த ஜோடியும் அதிரடி காட்ட முயல கிஷன் 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கிஷனுக்கு அடுத்ததாக இளம் வீரர் திலக் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | RCB அளித்த கவுரவத்தால் உருகும் கெயில், டிவில்லியர்ஸ்

பின்னர் சாம்ஸும் டேவிட்டும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இணைய ஆரம்பித்ததும் உம்ரான் மாலிக் சாம்ஸை 15 ரன்களில் வெளியேற்றினார். இதனால் மும்பை அணி இக்கட்டான நிலைக்கு சென்றது. இதனையடுத்து டேவிட்டும் ஸ்டப்ஸும் ஜோடி சேர்ந்தனர். இக்கட்டான நிலையிலிருந்து அணியை இந்த ஜோடி மீட்கும் என நினைத்திருந்த சமயத்தில் ஸ்டப்ஸ் 2 ரன்களில் வெளியேறினார்.

ஸ்டப்ஸுக்கு பிறகு ரமன்தீப்புடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட், நடராஜன் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்களை அடித்து ரன் அவுட்டானார். இதன் பிறகு வந்தவர்களும் சொதப்ப மும்பை அணி இறுதியில் 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest news

அமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Wall Street Journal பத்திரிகை, அதன் உரிமையாளர் Rupert Murdoch உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான...

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் குழு ஒன்று 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டியை கண்டுபிடித்துள்ளது. கிழக்கு அண்டார்டிக் தீபகற்பத்தில் 2,800 மீட்டர் ஆழத்தில் தோண்டிய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது,...

பல பிரபலமான ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

பிரபலமான விடுமுறை இடங்களுக்குச் செல்லும் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாலி, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரேபிஸ்...

திரும்ப அழைக்கப்பட்ட 70,000 Toyota வாகனங்கள்

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் கிட்டத்தட்ட 70,000 Toyota வாகனங்கள், ஆயிரக்கணக்கான பிரபலமான sedans, hatchbacks மற்றும் SUVகள் உட்பட, ஒரு சாத்தியமான கோளாறு காரணமாக அவசரமாக திரும்பப்...

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் குழு ஒன்று 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டியை கண்டுபிடித்துள்ளது. கிழக்கு அண்டார்டிக் தீபகற்பத்தில் 2,800 மீட்டர் ஆழத்தில் தோண்டிய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது,...

பல பிரபலமான ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

பிரபலமான விடுமுறை இடங்களுக்குச் செல்லும் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாலி, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரேபிஸ்...