News ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

-

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்டு அலுவலர்களும் இணைந்து செயலாற்ற இருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.