Newsரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

-

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்டு அலுவலர்களும் இணைந்து செயலாற்ற இருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest news

பட்டினியால் வாடும் 50,000 ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50,000 ஆஸ்திரேலியர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. OzHarvest என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய...

விக்டோரியன் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்

விக்டோரியாவின் Mornington தீபகற்பத்தில் உள்ள Cape Schanck பகுதியில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஒருவருடையது...

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

ஹாமில்டனில் London plane மரங்களை அகற்றுவது குறித்த விவாதம்

விக்டோரியாவின் ஹாமில்டன் நகரில் 100 London plane மரங்களை அகற்றுவது குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. மரங்களின் வேர்கள் நடைபாதைகள், கட்டிடங்கள் மற்றும் நீர் குழாய்களை சேதப்படுத்துகின்றன....

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

மின்-சைக்கிள் சார்ஜரால் தீப்பிடித்த வீடு

அடிலெய்டில் உள்ள ஒரு வீடு, மின்-பைக் சார்ஜரால் ஏற்பட்ட தீ விபத்தில் மோசமாக சேதமடைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஒரு பெண்ணும்...