
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் மனைவி மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து வருவதாக கூறி கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். மனைவிக்கு நூடுல்ஸ் தவிர வேறு எதுவும் சமைக்க தெரியவில்லை என கணவர் குற்றம்சாட்டி உள்ளார்.
காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் நூடுல்ஸ் சமைத்து கொடுக்கிறார். தனது மனைவி கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றால் கூட, வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்பது தான் விவாகரத்திற்காக கணவர் தரப்பில் சொல்லப்பட்ட காரணம். இவர்கள் மனம் ஒத்து பிரிவதில் உறுதியாக இருந்ததால் நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்தும் வழங்கி உள்ளது.

800 முதல் 900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20 முதல் 30 வழக்குகளில் மட்டுமே தம்பதிகள் ஒன்று சேர்க்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாகவும். மிக சாதாரண காரணத்திற்காக பலர் விவாகரத்து கேட்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பல வழக்குகளில் பெண்கள் தான் விவாகரத்திற்கு முன் வருகிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.