
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யா ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான விளம்பர பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
விக்ரம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கமல், மலேசியா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் – ரசிகர்கள் சந்திப்பின் போது, தளபதி விஜய்யுடன் இணைந்து எப்போது நடிக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. விக்ரம் படத்தின் மூன்றாவது பாகமும் தயாராக உள்ளது என சொல்லப்படுவதால் அதில் விஜய் நடிப்பாரா என்றும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல், தளபதி விஜய் கால்ஷீட் அளித்தால் அவரும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். விக்ரம் 3 படத்திற்காக வேறு ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளோம். இருந்தாலும் அந்த சமயத்தில் விக்ரம் 3 படத்தில் நடிக்க விஜய் தயாராக இருந்தால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாராக உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்சும் தயாராக உள்ளதாக கூறினார் கமல். விக்ரம் 3 படத்திற்காக சூர்யாவை தான் கமல் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.