மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து, உயிரிழந்த பாடகர்

0
434

மலையாளத்தில் பிரபல பின்னணி பாடகராக இருக்கும் எடவா பஷீர், பாடகர் கே.ஜே.யேசுதாசின் பாடல்களை கேட்டு பாடகர் ஆனவர். இவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் யேசுதாசின் பாடலை , மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார். உருக்கமாக பாடிக் கொண்டிருந்தவர் திடீரென மேடையிலேயே மயங்கி விருந்தார். இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனால் மலையாள திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் எடவா பஷீரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ப்ளூ டயமண்ட் என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டையொட்டி கேரள மாநில ஆலப்புழாவில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தான் எடவா பஷீர் பாடிக் கொண்டிருந்தார்.

78 வயதாகும் எடவா பஷீன் இறுதிச் சடங்குகள் அவரின் சொந்த ஊரில் நடைபெற்று வருகிறது. சொந்த ஊரிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. யோசுதாசின் அதிதீவிர ரசிகரான எடவா பஷீர், கடைசியாக யேசுதாஸ் பாடிய பாடலை பாடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்தது தான் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleவிஜய்யுடன் இணைந்து எப்போது நடிப்பீர்களா…கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய பதில்
Next articleகுரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!