Newsஇரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரியால் Hepatitis A தொற்று?

இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரியால் Hepatitis A தொற்று?

-

அமெரிக்காவிலும் கனடாவிலும் சிலர் Hepatitis A என்ற கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 17 பேரும் கனடாவில் 10 பேரும் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் FreshKampo அல்லது HEB என்ற பெயரின்கீழ் மார்ச் 5 முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை விற்கப்பட்டன.

அவற்றை வாங்கி உறைய வைத்தவர்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...