
இசைஞானி இளையராஜாவிற்கு ஜுன் 2 ம் தேதி 80 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரபலமான திருக்கடையூர் அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரனின் குடும்பத்தினர், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இளையராஜாவின் ஆயுள் விருத்திக்காக ஆயுள் ஹோமமும் நடத்தப்பட்டது.

குடும்பத்துடன் நள்ளிரவில் திருக்கடையூர் வந்த இளையராஜாவிற்கு அதிகாலையில் கோயிலில் சதாபிஷேகம் நடத்தப்பட்டது. இளையராஜாவிற்காக கோ பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

