புகைப்படம் எடுக்க தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பிய நடிகர் பாலகிருஷ்ணா

0
1776

தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான என்.டி.ராமாராவின் மகனும், அரசியல் தலைவருமான நந்தமுரி பாலகிருஷ்ணா, முன்னணி நடிகராகவும் உள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அகண்டா படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அடிக்கடி ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் பொது இடங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். இவர் சமீபத்தில் தனது ரசிகர் மன்ற தலைவரின் வீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

விழா முடிந்து பாலகிருஷ்ணா புறப்படும் போது, அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்போது குழுவாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க பாலகிருஷ்ணா நின்று கொண்டிருந்த போது, அவர் அருகில் நின்றவரின் தோளில் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பாலகிருஷ்ணா, அந்த குழந்தையின் முதுகில் அடித்து எழுப்பி, கண் விழிக்க வைத்து, புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதால் பலரும் பாலகிருஷ்ணாவின் செயலுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். புகைப்படம் எழுப்பதற்காக தூங்கும் குழந்தையை அடித்து எழுப்பது மிகவும் தவறான செயல் என வன்மையாக கண்டித்துள்ளனர்.

Previous articleவலியை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய இந்திய வம்சாவளி பொறியாளர் குழு
Next articleகொரோனா தடுப்பு நடவடிக்கை…கார்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி