Sportsஇலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி - அனைத்து டிக்கெட்டுக்களும்...

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி – அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனை

-

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...