ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இம்மாதம் 26 திகதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய திகதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது.
சூரிய இயற்பியல், வானியல் இயற்பியல், கிரக அறிவியல் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த ராக்கெட்டுகளை நாசா விண்ணில் செலுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் நேரடியாக நாசா மேற்கொள்ளும் இந்த அற்புதமான திட்டம், ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனுக்கும் பெருமையளிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பெனீஸ் தெரிவித்துள்ளார்.