மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36) என்று தெரியவருகிறது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர், தனது மூன்று வயதுக் குழந்தையோடு மெல்பேர்னுக்கு வந்த சுதர்சினி, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மெல்பேர்னில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை விக்டோரியப் பொலீஸார் மேற்கொண்டனர்.