இனி கட்டணம் வசூலிக்கப்படும்… டெலிகிராம் புதிய அறிவிப்பு

0
279

பொது மக்கள் இடையே தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலிக்கு இணையாக டெலிகிராம் செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் ஆன்ராய்டில் கிடைக்கும் டெலிகிராம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருவது பொதுவான ஒன்று தான். இதனிடையே தற்போது டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous articleஅமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம்
Next articleகேரளாவில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…கொச்சி கோயிலில் சிறப்பு தரிசனம்