ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர் வரவேற்றுள்ளார்.
மேலும் துன்பப்படும் அகதிகளுக்காக ஆஸ்திரேலியாவின் ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான Craig Foster குரல் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலையை அவர் வரவேற்பதனை டுவிட்டர் பதிவு மூலம் பதிவிட்டுள்ளார்.
“நல்ல ஒரு தொடக்கம் பிரதமர். மேலும் பலர் துன்பப்படுகிறார்கள்,” என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
பிரியா – நடேஸன் குடும்பத்தினர் அண்மையில் அகதி முகாமில் இருந்து விடுக்கப்பட்டு சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து குறித்த ஓய்வுப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
