Newsவெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

வெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது செய்ததோடு குறித்த மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Latest news

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டில் 6 மாதத்திற்கு மூடப்படவுள்ள டிராம் பாதை

தெற்கு டெரஸ் மற்றும் க்ளெனெல்க் இடையேயான டிராம் பாதை நீட்டிக்கப்பட்டதால், அடிலெய்டு பயணிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த வார இறுதியில் தொடங்கும்...