கார்பன் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும் : பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி

0
363

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கால நிலை மாறுபாடு காரணமாக 2030 ம் ஆண்டிற்கும் கார்பன் வெளியிடப்படும் அளவு 43 சதவீதம் குறைக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி அளித்துள்ளார்.

முந்தைய அரசுகள் 26 சதவீதம் முதல் 28 சதவீதத்தை இலக்காக வைத்து செயல்பட்ட நிலையில், தற்போதுள்ள அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான அரசு 43 சதவீதம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். 2005 என்ற அளவில் இருந்து படிப்படியாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் தான் ஆலோசனை செய்ததாகவும், ஆஸ்திரேலியாவின் இந்த செயல்பாட்டை உலக நாடுகள் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் கடுமையான வறட்சி, பஞ்சம், மற்றொரு புறம் வரலாறு காணாத வெள்ளம் போன்ற அபரிமிதமான பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் அப்படி ஏதும் நடைபெறாமல் இருக்க கார்பன் துகள்களின் வெளியீட்டை குறைக்க சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கார்பன் வெளியீடு தொடர்பான ஒப்பந்தத்திலும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.

Previous articleவிஜய்யின் அரபிக்குத்து பாடல் நிகழ்த்திய புதிய சாதனை
Next articleஆஸ்திரேலியாவில் 2 மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படுத்தப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை