ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.
விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் விமானம், ரயில், பேருந்துப் பயணத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.
வேலையிடக் கட்டாயத்தடுப்பூசி விதிமுறைகளும் மாற்றம் காணவிருக்கிறது. கல்வி நிலையங்கள், உணவு விநியோகத்துறை போன்றவற்றில் வேலை செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வீட்டிலிருந்து பாடசாலைகளுக்கு வேலையிடங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ உதவிச் சேவைகளைப் பெறவும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.