பிஎம்டபிள்யூ பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்

0
312

நடிகர் அஜித் குமார் சூப்பர் பைக்கில் ஐரோப்பாவை வலம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. குறிப்பாக தனது பைக்கிற்கு அஜித் பெட்ரோல் போடும் காட்சி அதிகம் கவர்ந்துள்ளது. அஜித்தின் கடின உழைப்பில் உருவான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்தை சூப்பர் ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஏகே 61 என்பது ஒர்க்கிங் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தை இயக்கிய எச். வினோத் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். ஏகே 61 படத்தில் வங்கிக் கொள்ளை என்பது முக்கிய காட்சிகளாக அமையும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் மவுண்ட் ரோடு போன்று ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இடைப்பட்ட இந்த நாட்களில் அஜித் தனது சூப்பர் பைக்குடன் ஐரோப்பாவை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக பிரிட்டனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இந்த பயணத்தின்போது அஜித் தனக்கு விருப்பமான பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பைக்கை பயன்படுத்தியுள்ளார். 1200 சிசி திறன் கொண்ட இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன. ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Previous articleஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…புதிதாக 12,899 பேருக்கு கொரோனா தொற்று
Next articleமுள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு தென் அவுஸ்திரேலியாவில் மரம் நடும் நிகழ்வு