Newsஅடுத்த மாதம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள...

அடுத்த மாதம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பம்!

-

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் வசதிகளுக்கு அமைய பலாலி விமான நிலையத்தில் 72 பயணிகள் பயணிக்க கூடிய விமானங்களை மாத்திரமே தரையிறக்க முடியும்.

இதனை அதிகரிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிக பயணிகள் பயணிக்க கூடிய விமானங்களை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நன்றி – தமிழன்

Latest news

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

நெடுஞ்சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் பாதசாரிகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது 2007...

விக்டோரியா காட்டுத்தீ குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆலனின் சிறப்பு அறிக்கை

விக்டோரியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ பருவம் குறித்து முறையான மற்றும் சுயாதீனமான மறுஆய்வுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் உறுதியளித்துள்ளார். தீ...

Gold Coast-ல் ஒரு கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து

Gold Coast-இன் Southport-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த மனிதரின் கால்கள் கான்கிரீட்...

Gold Coast-ல் ஒரு கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து

Gold Coast-இன் Southport-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த மனிதரின் கால்கள் கான்கிரீட்...

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...