இஸ்ரேலில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைக்க அரசு முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் பாராளுமன்றம் கலைக்கப்படுவது கடந்த 3 ஆண்டுகளில் இது ஐந்தாவது முறையாகும்.
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய தொலைக்காட்சியில் தோன்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் Naftali Bennett, அரசு கலைப்பது என்பது அவ்வளவு எளிதான முடிவு கிடையாது. ஆனால் இஸ்ரேல் தற்போதுள்ள சூழலில் அதுவே சரியானதாக இருக்கும் என்றார்.
தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை வெளியுறவுத்துறை அமைச்சரான Yair Lapid இடைக்கால பிரதமராக தொடர்வார் என ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே பிரதமர் Naftali Bennett தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் பல்வேறு அரசியல் குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்பட்டது. இன் காரணமாக வேறு வழியின்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.