அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கையில் உள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது.
இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு படகுகளில் பொருத்தப்படும் அலார ஏற்பாடு, குறிப்பிட்ட படகுகள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கோ அல்லது ஏனைய குற்றச்செயல்களுக்கோ பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பேருதவியாக அமையும் என்றும் இந்த அலாரமானியை படகிலிருந்து கழற்றுபவர்கள் அரசாங்கத்தினால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.