
அமெரிக்காவில் தரையிறங்கும் உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு 30,000 பிக்சல் போன்களை வழங்குவதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கூடுதலாக, Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, தேடல் விளம்பரம் மற்றும் தானமாக தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். Welcome.us CEO கவுன்சிலின் கீழ் பிச்சை இந்த தானத்தை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் தங்கள் புதிய அமெரிக்க சமூகங்களுடன் தொடர்புகொள்வதற்கு Google Translate போன்ற கருவிகள் உதவும். அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கலாம் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். ஜூன் 20 அன்று “@welcomeus க்கு கூடுதலாக 20,000 பிக்சல் போன்களை நன்கொடையாக வழங்குகிறோம். அதனால் அதிகமான உக்ரேனிய மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள், அமெரிக்காவில் வாழும் நாட்களை தங்கள் வீட்டில் இருப்பதை போல் உணர வைக்க முடியும்” என்று சுந்தர் பிச்சை ட்வீட் செய்தார்.

மேலும், அகதிகளுக்கு சுந்தர் பிச்சை 30,000 பிக்சல் போன்களை நன்கொடையாக வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகை மூலம் Google நிறுவனம் தெரிவித்துள்ளது. Google Ukraine Support Fundன் முதல் 17 பயனாளிகள் இந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்யப்பட்டனர். பெறுநர்கள் தங்கள் ஸ்டார்ட்அப்களைத் தொடங்க தேடல் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். இந்தத் திட்டம், பெறுநர்களுக்கு சரியான தொழில்துறை நபர்களுடன் இணைவதற்கும், ஆரம்ப நிலையிலேயே ஸ்டார்ட்-அப்களைத் தொடங்குவதற்கும் உதவும்.
உக்ரைன் ரஷிய போரில் இருந்து தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி, வேறு நாட்டில் தஞ்சம் புகும் மக்களுக்கு தங்களால் முடிந்த தொழில்நுட்ப, பொருளாதார உதவிகளை செய்வதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது.