
பிரான்சு வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் சார்பில் இணையதள நேரலையில் பிரான்சில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை மற்றும் திருக்குறள் மாநாடு அறிமுக விழா ஜூன் 26 ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையை பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தனும், வாழ்த்துரையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை தலைவர் முனைவர்,இரா.குறிஞ்சி வேந்தனும் வழங்கினர். இவ்விழாவில் பிரான்சு வொரெயால் தமிழ் கலாச்சார மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.