இலங்கையில் 6 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாவரை அறிவிடுகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையே ஆட் கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே, மோசடி வலைக்குள் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.