பொது இடங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குகிறது அமெரிக்கா

0
283

பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று கூறியது. வன்முறைகளும் வன்ம எண்ணங்களும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு தீர்வை வன்முறை மூலமே அடைய முடியும் என்று நம்புகின்றனர். ஆயுதப் பிரயோகம் என்பது சர்வ சாதாரணமாக மாறி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கர்கள் துப்பாக்கி பயன்படுத்துவது தொடர்பான முக்கிய தீர்ப்பை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

2008 இல் அமெரிக்க நீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் மக்கள் வீட்டில் துப்பாக்கியை வைத்திருக்க உரிமை உண்டு என்று நிறுவியது. அதை 2010 இல் உறுதியும் செய்தது. இதனால் மக்களிடம் ஆயுத இருப்பு அதிகரித்தது. ஆனால் அது குறித்த பயன்பாட்டு வரைமுறைகள் ஏதும் வழங்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் டெக்சாஸ், நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் அதிக எண்ணிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளுக்கு பின் துப்பாக்கி குறித்த சட்ட திருத்தம் தொடர்பாக காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது, அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் நாட்டில் உள்ள மக்கள் துப்பாக்கி பயன்படுத்துவது மற்றும் உடமை கொள்வது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும்போது நீதிபதிகள் மக்கள் துப்பாக்கி பயன் படுத்துவதை சட்டப்படி செல்லும் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட நாட்டின் மிகப்பெரிய நகரங்களின் தெருக்களில் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அதிக மக்கள் அனுமதிக்குப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கியத் தீர்ப்பால் அமெரிக்கா நாட்டின் கால்வாசி மக்களின் நிம்மதி பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் “வீட்டிற்கு வெளியே தற்காப்புக்காக கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்லும் தனிநபரின் உரிமையை” அரசியலமைப்பு பாதுகாக்கிறது என்று நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் தனது ஒரு தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இப்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம், நீதிபதிகள் ஒரு நியூயார்க் அரசு சட்டத்தை ரத்து செய்தனர். அதாவது மக்கள் பொது இடத்தில் துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான தேவையை நிரூபிக்க வேண்டும். “ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தாங்குவதற்கும்” உள்ள உரிமையை இந்த சட்டம் ஒழுங்கு படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கலிபோர்னியா, ஹவாய், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஜெர்சி மற்றும் ரோட் தீவு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சட்டங்கள் உள்ளன. எனவே பிடென் நிர்வாகம் நியூயார்க்கின் சட்டத்தை சரியாக நிலைநிறுத்த வேண்டும். மிகுந்த கவனம் தேவை என்று நீதிபதிகளை வலியுறுத்தியது.

இப்போதுள்ள நியூயார்க்கின் சட்டத்தை ஆதரிப்பவர்கள் அதை ஏற்றுகொண்டால் நாட்டின் தெருக்களில் அதிகமான துப்பாக்கிகள் மற்றும் வன்முறைக் குற்றங்களின் அதிக விகிதங்களுக்கு வழிவகுக்கும் என்றும் வாதிட்டனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் காலத்தில் இருந்து துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த முடிவு அவர்களுக்கு ஆதரவாக வந்துள்ளதை எண்ணி சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்.. படுக்கை அறையில் சிக்கிய ஊழியர்
Next articleஉக்ரைன் அகதிகளுக்கு கூகிள் பிக்சல் ஃபோன் -சுந்தர் பிச்சை