இந்தியாவில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு

0
326

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, செயற்கை கை, கால், சுத்திகரிக்கப்படும் நீர் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே இவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தொடர வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமஞ்சளில் மறைத்திருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
Next articleவாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம்