வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம்

0
309

பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. சிரோனா ஹைஜீன் நிறுவனத்துடன் , வாட்ஸ்அப் இணைந்து, பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் பயனர்கள் தங்கள் மாதவிடாய் கால நினைவூட்டலைத் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலம் மற்றும் அவற்றின் கடந்த கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ளிட வேண்டும். அந்த பதிவை வைத்து, பயனரின் மாதவிடாய் தேதியை நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் பயனரின் வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

இந்த பீரியட் டிராக்கர், வாட்ஸ்அப்பின் வணிக தளத்தில் (Whatsapp Business) கட்டமைக்கப்பட்டுள்ளது. பீரியட் டிராக்கிங் கருவியை மூன்று இலக்குகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம் – மாதவிடாய் காலம், கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தைத் தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளைக் கண்காணிக்க முடியும் என்று சிரோனா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் காலங்கள் மற்றும் கடைசி கால விவரங்களைப் பற்றிய விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் மூலம் பயனரின் இலக்கின்படி நினைவூட்டல்கள் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகளை பீரியட் டிராக்கர் பகிர்ந்து கொள்ளும்.

வாட்ஸ்அப்பில் மாதவிடாய் சுழற்சியை எவ்வாறு கண்காணிக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இதோ!

  1. உங்கள் தொடர்புகளில் (Contacts) 9718866644 என்ற எண்ணைச் சேர்க்கவும்.
  2. பிறகு வாட்ஸ்அப்பில் “Hi” என்று அனுப்பவும்.
  3. சிரோனா விருப்பங்களின் பட்டியலை வழங்கும்.
  4. உங்கள் மாதவிடாய்களைக் கண்காணிக்க, அரட்டைப் பெட்டியில் (Chat Box) பீரியட் டிராக்கர் என்று ஆங்கிலத்தில் எழுதவும்.
  5. பின்னர் உங்கள் மாதவிடாய் கால விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
  6. இந்த தகவலை வைத்து சிரோனா உங்கள் அண்டவிடுப்பின் விவரங்கள், ஆரோக்கியம், அடுத்த மாதவிடாய் மற்றும் கடைசி காலம் மற்றும் உங்கள் சுழற்சியின் நீளம் போன்ற விவரங்களைக் காண்பிக்கும்.
Previous articleஇந்தியாவில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு
Next article”நாங்கள் கருவுற்றிருக்கிறோம்” – இன்ஸ்டாவில் போட்டோ போட்டு அறிவித்த ஆலியா – ரன்பீர் தம்பதி