
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பாதிப்படைந்தனர். கொரொனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்காளக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் இன்று காலமனார்.