புகைபிடிக்கும் ஆண்கள் வைட்டமின் பி12 அதிகம் எடுத்து கொள்வது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

0
332

எந்த வித இரண்டாவது சிந்தனையும் இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இந்த ஆராய்ச்சி வைட்டமின் பி நுகர்வுக்கும், நுரையீரல் புற்றுநோயின் அதிக ஆபத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளது.

Vitamin B12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து, இது தொற்றுநோயைத் தடுக்க, உயிரணு வளர்ச்சி, பார்வை திறனை மேம்படுத்த, மூளை செயல்பாட்டை ஒழுங்குபடுத்த. சரியான செரிமான செயல்பாடுகள் மற்றும் நரம்பு செயல்பாட்டை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் வைட்டமின் பி விலங்கு பொருட்களில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து Vitamin B பெற முடியாமல் தவற விடும் ஒருவர் அதனை ஈடுகட்ட சப்ளிமெண்ட்ஸ்களை நாடுகின்றனர். Vitamin B காம்ப்ளக்ஸ் சப்ளிமென்ட்டில் பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 வைட்டமின்கள் உள்ளன. இதனிடையே 70,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வைட்டமின் பி நுகர்வுக்கும் நுரையீரல் புற்றுநோயின் அதிக ஆபத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

WHO தகவல்களின்படி நுரையீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 2020-ல் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இறந்தனர். 2020-ம் ஆண்டு புற்றுநோய் இறப்பில் நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணமாக இருந்தது. அதே ஆண்டில், 2.21 மில்லியன் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நுரையீரல் புற்றுநோய் இந்தியாவில் மிகவும் பொதுவானது. நுரையீரல் புற்றுநோய் அனைத்து புற்றுநோய்களில் 5.9% மற்றும் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 8.1% ஆகும்.

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகியவை தனிப்பட்ட சப்ளிமெண்ட் மூலங்களிலிருந்து பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இவை மல்டிவைட்டமின்கள் அல்ல என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் 30% முதல் 40% அதிகரிப்புடன் தொடர்புடையது என்று ஆய்வு குறிப்பிடுகிறது. கூடுதலாக வைட்டமின்கள் B6, ஃபோலேட் மற்றும் B12 ஆகியவற்றை எடுத்து கொள்வது பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது அல்ல என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் 10 வருட சராசரி சப்ளிமென்ட் அளவை ஆராய்ந்த போது புகைபிடிக்கும் ஆண்களிடையே ஆபத்து இன்னும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

வைட்டமின் பி 12 கொண்ட விலங்கு பொருட்களில் இறைச்சி, முட்டை மற்றும் பால் உள்ளிட்டவை அடங்கும். வைட்டமின் பி பற்றாக்குறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. டிஎன்ஏவின் புதிய இழைகளை உருவாக்குவதில் உள்ள பிழைகள் உயிரணு பிரிவில் ஈடுபடும் மரபணுக்களையும் சீர்குலைக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வைட்டமின் பி12-ன் அதிகப்படியான நுகர்வு டிஎன்ஏ மெத்திலேஷனில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது. எனவே மக்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தாங்களாகவே அதிகப்படியான வைட்டமின் சப்ளிமெண்ட்ஸை எடுத்து கொள்வதற்கு எதிராக நிபுணர்கள் இந்த ஆய்வின் மூலம் எச்சரித்து உள்ளனர்.

பல்வேறு வைட்டமின் பி-க்களின் தினசரி தேவை:

வைட்டமின் பி1: 1.5 மி.கி

வைட்டமின் பி2: 1.7 மி.கி

வைட்டமின் பி3: 20 மி.கி

வைட்டமின் பி5: 5 மி.கி

வைட்டமின் பி6: 1.3 மி.கி

வைட்டமின் பி7: 30 எம்.சி.ஜி

வைட்டமின் பி9: 400 எம்.சி.ஜி

வைட்டமின் பி12: 2.4 எம்.சி.ஜி

இந்த புள்ளிவிவரங்கள் பல சுகாதார நிறுவனங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. உங்களுக்கு தேவையான அளவு பற்றிய தெளிவான யோசனையை பெற உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

Previous article‘வெள்ளத்தைத் தாங்கும்’ மிதக்கும் வீடுகளைக் கண்டுபிடித்துள்ள ஜப்பான் நிறுவனம்
Next articleஆஸ்திரேலியாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை