சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தியுள்ளனர்.
இவர்கள் சிலாபம் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், நாடு கடத்தப்பட்டவர்களில் 05 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-978 என்ற விசேட விமானம் மூலம் கொக்கோஸ் தீவில் இருந்து இன்று காலை 06/30 காலை 08.40 மணியளவில் இந்தக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த விமானத்தில் இலங்கையர்களுடன் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.