ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
பார்வையாளரை நோக்கி எச்சில் துப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நிக் க்ரியோஸ் முதல் சுற்று ஆட்டத்தின் போது, தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பினார்.
இதேபோல, Line Umpiresஐ 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் திட்டியுள்ளார்.
இந்த தவறுகளை எல்லாம் நிகி ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.