உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.
உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் ஒரே மதிப்பெண்களை பெற்று 2 வது இடத்தில் உள்ளன.
4 வது இடத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரமும், 5 வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமும், 6 வது இடத்தில் ஜெர்மனியின் பெர்லினும், 7 வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும், 9 வது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசும், 10 வது இடத்தில் ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியும் உள்ளன.
மலிவு விலையில் பொருட்கள், வீடு வாடகை என்று வரும்போது முன்வரிசையில் வந்த பல நகரங்கள் வெளிநாட்டு மாணவர்களுடன் உள்நாட்டு மாணவர்கள் சகஜமாக பழகுவதுடன், அவர்களுக்கு பிடித்தமான சூழலை கணக்கிட்டால் இந்த வரிசையில் பின் தங்கிவிடுகின்றன.