ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி நிறுவனம் Woolworths இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
சில பகுதிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என Woolworths நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Woolworths அதிகபட்ச விநியோகத்தை பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மட்டுமே Woolworths இல் விற்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்பொருள் அங்காடிகளில் காய்கறி, பழங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் முட்டை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.