கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருட்கள் திருடியதாமையினால் இவ்வாறு முச்சக்கர வண்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி ஒன்றின் அருகில் குறித்த முச்சக்கர வண்டி இவ்வாறு தூக்கி தொங்கவிடப்பட்டுள்ளது.
அதில் “எமது பிரதேசத்தில் பெற்றோல், டீசல், பற்றரி திருடிய முச்சக்கர வண்டி இதுவாகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.