News மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு எப்போது விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள https://migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...