Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு எப்போது விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள https://migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்.

Latest news

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்கும் Trump Gold Card

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிக அளவு பணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெற அனுமதிக்கும் Trump Gold Card விசா திட்டத்தைத் தொடங்கி...