Newsசிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் - 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய...

சிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் – 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய அபாயம்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 23 பகுதிகளில் இயற்கைப் பேரிடர் எச்சரிக்கை நேற்றிரவு விடுக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணம், சம்பளத்துடன் கூடிய ஓய்வு ஆகிய நிதியுதவி வழங்கப்படும்.

கனத்த மழையாலும் அணைக்கட்டுகள் வேகமாக திறக்கப்பட்டதாலும் சிட்னி ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளன.

65 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யும் என்றும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டது.

கார்களிலும் வீடுகளிலும் சிக்கியிருப்போரை வெளியேற்ற மீட்புக் குழுவினர் மும்முரமாகச் செயல்படுகின்றனர்.

19ஆயிரம் வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...